அஜித் நடிக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்த படத்தின் டப்பிங் வேலையில் அஜித் தீவிரமாக ஈடுபட்டுவரும் படம் சமீபத்தில் வெளியானது.

தற்போது இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த ஜான் கோக்கன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஷூட்டிங் முடிவடைந்தது.

இதனை அடுத்து அஜித்துடன் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குனர் ஹெச். வினோத்-துக்கு நன்றி தெரிவித்துள்ள ஜான் கோக்கன் தான் நடிக்க வேண்டிய பகுதி நிறைவு பெற்றதாக தெரிவித்துள்ளார்.

வீரம் படத்தில் ஏற்கனவே நடித்திருந்த ஜான் கோக்கன்-னுக்கு அஜித்துடன் நடிப்பது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தை தானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக ஜான் கோக்கன் தெரிவித்துள்ளார்.