அபுதாபி: பக்ரீத் பண்டிகை வரவிருக்கிற நிலையில், இந்திய ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி திடீர் ஊரடங்கை அறிவித்துள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபு தாபியில் வரும் 19ந்ததி முதல் (திங்கட்கிழமை) இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அறிக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் பக்ரீத் பண்டிகை வர இருக்கும் நிலையில், அந்நாட்டு அரசு திடீரென இரவு லாக்டவுனை அறிவித்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டு, வெளிநாட்டவர்கள் வந்து செல்லவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. துபாய் மற்றும் சுற்றுலாத்தலங்களுக்கு வருபவர்களுக்கு கொரோனாநெகடிவ் சான்றிதழ் மற்றும் பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது தொற்று பரல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னர் துபாய் சுற்றுலாவுக்கு மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், தற்போது கொரோனா அபுதாபியை  கடுமையாகத் தாக்கியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறையினர்தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்ற நாடுகளைப் போல துபையிலும் சுற்றுலாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. துபையில் பெருமளவில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை இருந்து வந்தாலும், யுஏஇ-க்கு  வருபவர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகள் கட்டாயம் மற்றும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற திட்டம் இருந்தபோதிலும். புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் ஒருநாள் எண்ணிக்கை 1,500 ஆக உள்ளது

இதையடுத்து அந்நாட்டின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் பேரிடர் மேலாண்மை குழு, அவசர கால நடவடிக்கையாக இரவு நேர லாக்டவுனை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி  இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை, 5மணி நேர இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.