கொரோனா காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக தொடர்ந்து மூடப்பட்டிருந்த பாரிஸ் நகர ஈபிள் கோபுரம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஈபிள் கோபுரம் நீண்ட நாட்கள் மூடியிருப்பது இதுவே முதல்முறை.

பார்வையாளர்களுக்கு முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது பிரான்ஸ் அரசு.

ஆண்டொன்றுக்கு சுமார் 70 லட்சம் பார்வையாளர்கள் இந்த கோபுரத்தை காண வரும் நிலையில், தற்போது நாளொன்றுக்கு 13,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோபுரத்தின் மீது செல்லும் ‘லிப்ட்’-ல் வழக்கமாக செல்வதை விட 50 சதவீதம் குறைவான எண்ணிக்கையிலான பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.