சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஜூலை 31 வரை தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாகத் தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.   தற்போது தமிழகத்தில்   கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையொட்டி தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ஆம் தேதி உடன் முடிவடைகிறது.

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி தற்போது அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கி கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடர உள்ளது.

தற்போது தொடரும் தடைகள்

மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி தவிர்த்து)

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்து

திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்கள்

பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியில் பூங்காக்கள்

ஆகியவற்றுக்கான தடை தொடரும்.