ஜெனிவா: கொரோனா தொற்றின் 3வது அலையின் தொடக்கத்தில் உலக நாடுகள் உள்ளது. அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

கொரோனனா 2வது அலை உலகம் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளதால் இந்திய உள்பட உலக நாடுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. மேலும் தடுப்பூசி செலுத்தப்படுவதும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்தியாவை கொரோனா 3வது அலை தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, அதை  எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியளார்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்டரோஸ் அதோனம், டெல்டா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் கொரோனா தொற்றும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. தற்போது டெல்டா பிளஸ் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை 111க்கும் அதிகமான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்றவர்,

துரதிருஷ்டவசமாக நாம் தற்போது கொரோனா பெருந்தொற்றின் 3வது அலை தொடக்கத்தில் இருக்கிறோம், பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.