தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்! இன்று மாலை சென்னை வந்தடைந்தது…

Must read

டெல்லி: தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து இன்று மாலை சென்னை வந்தடைந்தன.

தமிழ்நாட்டில்  கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநிலஅரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. 3வது அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.  தமிழக மக்களிடையே தடுப்பூசி எடுத்துக்கொள்ள அதிக ஆர்வம் இருப்பதால், தடுப்பூசிக்கு பல மாவட்டங்களில் பற்றாக்கு ஏற்படுகிறது. இதை தடுக்க ல் தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்கக்கோரி மத்தியஅரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த நிலையில், புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மத்திய தொகுப்பிலிருந்து இன்று  3 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 30 பார்சல்களில் சென்னை வந்தடைந்தது. இந்த பார்சல்கள் அனைத்தும்,  சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்து கிடங்கிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவை மாவட்டங்களின் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என சுகாதாரத்துறை அலுவலகர்கள் தெரிவித்து உள்ளனர்.

More articles

Latest article