டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 236 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதார், மொத்த பாதிப்பு 269 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான தொற்று பரவியிருப்பது முதன்முதலாக டிசம்பர் 5ந்தேதி உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், 269 பேருக்கு ஒமிக்ரான தொற்று உறுதியாகி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,‘‘ஒமிக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிக பட்சமாக மகாராஷ்டிராவில் 65 பேரும் டெல்லியில் 64 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தெலங்கானா 24, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 21, கேரளம் 15, குஜராத் 14, ஜம்மு – காஷ்மீர் 3, ஒடிசா 3, உத்தரப் பிரதேசம் 2, ஆந்திரப் பிரதேசம் 2, ஒடிசா 2 , சண்டிகர், தமிழகம், லடாக், உத்தராகண்ட் ,மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்து உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளதாக பகுப்பாய்வு முடிவுகள் வந்துள்ளன என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை 10மணி அளவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்முலம் தமிழ்நாட்டில்  ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 34 ஆக உயர்ந்த நிலையில், நாடு முழுவதும் மொத்த எண்ணிகை  269 ஆக உயர்நதுள்ளது.

ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 104 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 165 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில்,  நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவ தொடங்கி உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 34ஆக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்