திருநெல்வேலி: கடந்த ஒரு மாதத்தில் தென்தமிழகத்தில் மட்டும் 21 கொலைகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கூலிப்படையின் வன்முறை கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

தென்காசியில் நேற்று (செப்டம்பர் 4ந்தேதி)  மாலை 2வது கட்ட பாத்திரையை தொடங்கிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னதாக  திருநெல்வேலிக்கு வருகை தந்தார். அங்கு கொலை செய்யப்பட்ட பாஜக இளைஞர் அணி நிர்வாகி ஜெகனின்  குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, ஜெகனின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம்  பேசும்போது,  ஜெகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான திமுக சேர்மனின் கணவரை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் என்று போராடினோம். 5 நாள் போராட்டத்துக்குப்பின் திமுக பிரமுகர் சரணடைந்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில், பாஜகவை வளர்த்தார் என்ற ஒரே காரணத்துக்காக கூலிப்படையை வைத்து ஜெகனை  திமுகவினர் கொலை செய்துள்ளனர். சரணடைந்த திமுக பிரமுகர் மீது ஏற்கெனவே 16 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 96 வழக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்தளவுக்கு தைரியம் அவருக்கு எங்கே இருந்து வந்தது?

பல்லடத்தில் ஒரே வீட்டில் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டுமுன் மது அருந்த வேண்டாமென கூறியதால் இந்த கொலை நடைபெற்றுள்ளது. குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட, பல்லடம் சட்டமன்றம் பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து கிளை தமிழக பாஜக தலைவர் சகோதரர் மோகன்ராஜ் சமூகவிரோதிகளால் குடும்பத்துடன் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மோகன் ராஜ் அவரது தம்பி, அம்மா, சித்தி என நான்கு பேரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். சகோதரர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்து, கட்டுப்பாடற்ற மது விற்பனையை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் சாராய வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, இன்னும் எத்தனை பொதுமக்கள் உயிர் பலியாக வேண்டும்?

தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கையில், அதற்குப் பொறுப்பான காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே.

குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கைகள் கட்டப்பட்டு இருக்கும் காவல்துறையை ஆளுங்கட்சி பிடியிலிருந்து விடுவித்து அவர்கள் பணி செய்ய அனுமதித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் தென் தமிழகத்தில் 21 வன்முறை கொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வன்முறை, கொலைகள் அதிகரித்த உள்ளது.  தமிழ்நாட்டின்  கூலிப்படையின் வன்முறை கலாச்சாரம் எந்தளவுக்க தலைதூக்கியுள்ளது என்பற்கு நெல்லை சம்பவம் ஒரு உதாரணம், இதுபோன்ற கொலை சம்பவங்களுக்கு அதிகரித்து வரும்,  குடி, கஞ்சா புழக்கம்  காரணம் என்று குற்றம் சாட்டியவர், தமிழ்நாட்டில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு உள்ளன என்று விமர்சனம் செய்தார். மேலும்,  தென் தமிழகத்தில் வன்முறையை தடுக்க வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டும். வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தி.மு.க., முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் உறவினர் கைது!

 

செயலிழந்தது காவல்துறை: ‘கொலை’ மாவட்டமானது நெல்லை – ஒரே மாதத்தில் 10 பேர் சாவு – மக்கள் பதற்றம்…