கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 7 ஆயிரம் பவர் டில்லர்களை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு விவசாயிகளுக்கு பவர் டில்லர்களை வழங்கினார்.
நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ. 64 லட்சம் மதிப்புள்ள 77 பவர் டில்லர்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இன்று (04/09/2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக குறு, சிறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திர கருவிகள் வழங்கியதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வ.உ.சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற… pic.twitter.com/oyNQtY6nhT
— M Appavu (@AppavuSpeaker) September 4, 2023
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் பவர் டில்லர்கள் வழங்கப்பட்டது.
மகமாயி திருமணி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார் விவசாயிகளுக்கு பவர் டில்லர்களை வழங்கினார்.
உழவுத் தொழிலில் நிலவிவரும் விவசாய பணியாளர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள் வழங்கப்பட்டது.