Month: January 2023

‘நீங்கள் அனுப்பிய பார்சல் திரும்பி வந்துள்ளது’! நூதன சைபர் க்ரைம் குறித்து தமிழக டிஜிபி வீடியோ மூலம் எச்சரிக்கை…

சென்னை: தமிழகத்தில் புதிதாக ஒரு சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் கடந்த சில நாட்களாக பதிவாகி வருவதாக கூறிய டிஜிபி சைலேந்திர பாபு, பொதுமக்களுக்கு அது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக சைபர் குற்றத்தில் ஈடுபட்டு வரும் ஒரு குடும்பல்…

தமிழ்நாடு விவகாரம்: கவர்னருக்கு கண்டனம் – கமல் கருத்துக்கு வரவேற்பு! கே.எஸ்.அழகிரி

வேலூர்:: தமிழ்நாடு குறித்து கவர்னர் ஆர்என்.ரவி பேசிய கருத்து கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், கவர்னரின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே வேளையில் கமல்ஹாசனின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளார். வேலூர்…

மாரத்தான் ஓட்டம்: சென்னையில் நாளை சில இடங்களில் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: சென்னையில் நாளை மராத்தான் ஓட்டம் நடைபெற உள்ள பல இடங்களில்  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து  காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ரன்னர்ஸ் மராத்தான் நெடுந்தூர ஓட்டக் குழுவினரின்…

கிழக்கு திசை காற்று மாறுபாடு – 15ந்தேதி வரை குளிர்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: கிழக்கு திசை காற்று மாறுபாடு காரணமாக இன்றுமுதல் 2 நாள் மழை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வரும்  15ந்தேதி வரை குளிர் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது. அதனப்டி,  இன்னும் 8 தினங்கள்…

மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்த ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சி நடத்த தமிழக அரசு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னையில் புத்தக காட்சியை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் புத்தக…

வட மாநிலங்களில் கடும் குளிர்: உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரேநாளில் 25 பேர் உயிரிழப்பு

டெல்லி:  வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவை கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கடும் குளிரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு  ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இ-மெயில் ஐடி கட்டாயம்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

சென்னை: அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து  வரும் மாணாக்கர்களுக்கு இ-மெயில் ஐடி கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு  மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3 ஆம்…

தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை:  இன்று காலை தொல்காப்பியர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர், அங்கு பணியாற்றும்  ஊழியர்களுக்கு  பொங்கல் பரிசு வழங்கினார்.  சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பூங்கா ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு…

ரூ. 48 கோடி ரூபாய் செம்மரம் கடத்தல்: சசிகலா உறவினர் – விவேக் மாமனார் மீண்டும் கைது!

சென்னை: செம்மரம் கடத்தல் தொடர்பாக வழக்கு காரணமாக,  சசிகலா உறவினரான பாஸ்கரன் என்பவர் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து ரூ.48 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரங்கள்  பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. செம்மரக்கட்டைகள் கடத்தல் தொர்பான வழக்கில் சசிகலாவின் உறவினர்…

குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை மெரினா உழைப்பாளர் சிலை அருகே நடத்த தமிழ்நாடு அரசு திட்டம்!

சென்னை: கடற்கரை காமராஜர் சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு  குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகின்ற 26-ம்…