சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சி நடத்த தமிழக அரசு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னையில் புத்தக காட்சியை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் புத்தக காட்சி நடைபெறுகிறது. புத்தக காட்சியில் 1,000 அரங்குகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். புத்தக காட்சியில் இலங்கை மற்றும் சிங்கப்பூரின் பதிப்பகங்கள் இடம்பெற்றுள்ளன. புத்தக காட்சியில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய பிரத்யேக அரங்கும் இடம்பெற்றுள்ளது.  மேலும், இந்த ஆண்டு முதன்முறையாக சர்வதேச புத்த காட்சியும் நடைபெறுகிறது. இந்த சர்வதேச புத்தக காட்சியில் 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த புத்தக கண்காட்சி 6ந்தேதி  முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும்,  46 ஆவது புத்தக காட்சியை   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நேற்று மாலை (6ந்தேதி) தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில்,  பேசிய  முதலமைச்சர்,  சென்னையில், புத்தக காட்சியும், இலக்கிய திருவிழாவும் தமிழ் திருவிழாக்களாக அமைந்துள்ளன இதுபோன்ற புத்த காட்சியை. அனைத்து மாவட்டங்களிலும்   தமிழக அரசு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

 

இந்த புத்தக காட்சிகளில், புத்தக விற்பனை மட்டுமின்றி சிறப்பான இலக்கிய சொற்பொழிவும் நடத்தப்படுகிறது. பதிப்பகங்களுக்கு உதவி செய்வதும், எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்குவதும் நாட்டில் அறிவொளி பரவுவதற்குத்தான். புத்தக காட்சிகளால் இலக்கிய எழுச்சி,அறிவு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. தமிழ் மீதும், புத்தகங்கள் மீதும், எழுத்தின் மீதும் மாறா அன்பு கொண்டவர் கலைஞர். பின்பு கலைஞர் பொற்கிழி விருதுகளைப் பெற்றுள்ள எழுத்தாளர்களையும் நான் வாழ்த்துகிறேன்.

அரசியலில் எவ்வளவு முரண்பாடு இருந்தாலும் சிறந்த எழுத்தாளர் என்றால் அவர்களை கலைஞர் பாராட்ட தயங்க மாட்டார். எழுத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் எத்தனையோ சிறப்புகளை அரசு செய்து வருகிறது. மொழி சிதைந்தால் இனம் சிதையும் பண்பாடு சிதையும், பண்பாடு சிதைந்தால் அடையாளம் போய்விடும்.

இவ்வாறு கூறினார்.