சென்னை:  இன்று காலை தொல்காப்பியர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர், அங்கு பணியாற்றும்  ஊழியர்களுக்கு  பொங்கல் பரிசு வழங்கினார்.

 சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பூங்கா ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி தொல்காப்பியர் பூங்கா ஊழியர்கள் 50 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்புடன் புத்தாடையை வழக்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் பற்கேற்றனர்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அடையார் Theosophical society இல் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார்கள், அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்ற 140 பேருக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தருவார்கள் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தந்து மகிழ்ந்தார்கள் என குறிப்பிட்டு அது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.