Month: December 2020

பத்திரிகைடாட்காம்-ன் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மலர்கின்ற புதுவருடம் உலகெங்கும் அமைதியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும், அனைவருக்கும்  உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….  – ஆசிரியர் –

எங்கள் வீரர்கள் சோர்வடைந்த உடல் & மனதுடன் விளையாடுகிறார்கள்: மிஸ்பா உல் ஹக்

கராச்சி: பாகிஸ்தான் வீரர்கள் சோர்வடைந்த உடல் மற்றும் மனதுடன் நீயூசிலாந்தில் விளையாடி வருகிறார்கள் என்றுள்ளார் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக். நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு டி-20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று…

யூஏஇ – இலவச கொரோனா தடுப்பு மருந்து மையங்கள் அறிவிப்பு!

அபுதாபி: கொரோனா தடுப்பு மருந்து, ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டில் உள்ள 7 அமீரகங்களில், எந்தெந்த மையங்களில் இந்த மருந்து வழங்கப்படும் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அபுதாபி, ஷார்ஜா, துபாய், அஜ்மான், ஃபுஜேரா, உம்…

இது நிச்சயமாக யோசிக்க வேண்டிய நேரம்தான்..!

இந்தியாவில், ஒவ்வொரு வகை கிரிக்கெட்டிற்கும் தனித்தனி கேப்டனை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை அவ்வப்போது எழுவதும், பின்னர் அப்படியே அடங்கிவிடுவதுமாக இருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில், இரட்டைக் கேப்டன் முறை செயல்பாட்டில் உள்ளது. அது வெற்றிகரமாகவும் செல்கிறது என்பது…

2021-ம் ஆண்டே ! வருக !! வருக !! – கவிதை

2021-ம் ஆண்டே ! வருக !! வருக !! கவிதை பா. தேவிமயில் குமார்   அதோ பாருங்கள் ! அழைக்கிறது புதிய ஆண்டு !   கடந்ததெல்லாம் (2020) கடந்ததே ! காலம் இனி உங்களுக்காக நானிருக்கிறேன் என ஒளி…

கொரோனா தடுப்பு மருந்து – நடவடிக்கைகளை துவக்கிய 50 நாடுகள்!

புதுடெல்லி: உலகளவில் சுமார் 50 நாடுகள் வரை, தமது மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. இவற்றில், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவைப் பொறுத்தவரை, முறையான அனுமதிக்கு காத்திராமலேயே, மக்கள்தொகையில் அதிக…

மேற்குவங்கம் – வேலைவாய்ப்புக்கான அட்டை வழங்கும் முகாமை நிறுத்திய பாஜக!

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 75 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான அட்டை வழங்கும் முகாமை, 2 வாரங்கள் கழித்து திரும்பப் பெற்றது பாரதீய ஜனதா. இந்த முகாமை, டிசம்பர் 13ம் தேதி தொடங்கியது அக்கட்சி. அதாவது, மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா…

இந்திய முன்னாள் ஹாக்கி நட்சத்திரம் மைக்கேல் கோண்டோ காலமானார்..!

ருர்கேலா: இந்தியாவின் முன்னாள் ஹாக்கி நட்சத்திரமும், உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தவருமான மைக்கேல் கோண்டோ, உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். தற்போது 73 வயதாகும் கோண்டோ, ஒடிசாவின் ரூர்கேலாவிலுள்ள இஸ்பாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கேயே அவரின் உயிர் பிரிந்தது. கடந்த 1972ம்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 937 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,18,014 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,122 .பேர் உயிர் இழந்து 7,97,391 பேர் குணம் அடைந்து தற்போது 8,501…

சென்னையில் இன்று 259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,18,014 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில் 259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,25,507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 4 பேர் உயிர்…