விருதுநகர்: மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, அவரது விருதுநகர் மணி மண்டபத்தில் அமைச்சர் பெருமக்கள், அரசியல் மற்றும் சமூக தலைவர்கள், பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 121ஆவது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜர் பிறந்தநாளை முன்னட்டு, அவரது பிறந்த ஊரான விருதுநகரில் உள்ள நூற்றாண்டு மணிமண்டபத்தில், உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அமைச்சர்கள் மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் சிவகாசி மேயர் சங்கீதா, விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், சாத்தூர் தொகுதி சட்டமன்ற உ ரகுராமன் உள்ளிட்டோர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
121வது பிறந்தநாள்: தமிழ்நாடு தலைநிமிர அடித்தளம் அமைத்தவர் ‘கர்மவீரர்’ காமராஜர் ….