சென்னை: பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,  காமராஜர் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்தார். பின்னர் நிகழ்ச்சியில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.

காமராஜர் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசு சார்பில் இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளில், மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகஅரசு சார்பில் சென்னை நங்கநல்லூர் பகுதியில் உள்ள நேரு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்  பள்ளியில் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர், பள்ளி மாணவர்களுக்கு தமிழ் அகராதிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

சாதிமத வேறுபாட்டை களைய பள்ளிகளில் ‘ஒரே  சீருடை’ திட்டம், ‘முதியோர் பென்ஷன்’ உள்பட பல திட்டங்களை அமல்படுத்தியவர் காமராஜர்!

உழைக்காமலேயே ஏழை மக்களுக்கு இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை எதிர்த்தவர் காமராஜர்…