நெட்டிசன்

வாட்ஸ்அப் பதிவு…

மிழ்நாட்டில், மக்களை சோம்பேறியாகவும், குடிகாரர்களாகவும் ஆட்சியாளர்கள் மாற்றி வருகின்றனர். ஏற்கனவே, சாதி, மதம் ரீதியிலான இலவசங்கள், ஸ்காலர்ஷிப் என பண உதவி வழங்கி, மக்களிடையே பிரிவினைகளை உண்டாக்கி, சாதி, மதமற்ற சமத்துவம் என்று கூறிக்கொண்டு, சாதி மத வேறுபாடுகளை உருவாக்கி குளிர்காய்ந்து வருகின்றன. சமீப காலமாக பெண்களுக்கான உரிமைத்தொகை விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இலவசம் என்ற பெயரில் தங்களது அரசியல் லாபத்துக்காக அரசியல் கட்சிகள், பல்வேறு ஏமாற்று வேலைகளை முன்னிறுத்தி, தமிழக மக்களை அடிமைப்படுத்தி வருகின்றன. ஆனால், இலவசம் வழங்குவதையே கடுமையாக எதிர்த்தவர் காமராஜர். அவரது ஆட்சி காலத்தில்தான், பள்ளி மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகையான ஸ்காலர்ஷிப் அமல்படுத்தப்பட்டது. ஆனால்,  படிப்பில் திறமையான மாணவர்களுக்கு மட்டுமே அந்த உதவி வழங்கப்பட்டது. அதுபோல, பள்ளி மாணவர்களிடையே உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு ஏற்படாத வகையில் கல்விச் சீருடை கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது, திறமைக்கு முன்னுரிமை கொடுக்காமல், சாதி மதம் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது. இதனால், சீருடை வழக்கமும் சீரழிக்கப்பட்ட நிலையில், சாதி, மதம் சார்ந்தே ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பள்ளி பருவக் காலத்திலேயே மாணவ மாணவிகளிடம் சாதி, மத வேற்றுமை தோன்றுகிறது.

ஆனால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட காமராஜர், இலவசமாக பண உதவி வழங்குவது குறித்து கூறியிருப்பதாவது,

மாதம்தோறும் உழைக்காமலேயே அது ஏழை மக்கள் என்றாலும் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும்? என்பதை  படிக்காத மேதை காமராஜர் அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பேசி உள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம்.

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி…

நிகழ்ச்சியில் படிக்காத மேதை காமராஜர் தனக்கே உரிய பாணியில் பேசியது ….

நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்…..

ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று கேட்கிறாங்க…

எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை….

பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டேதான் இருக்கு…..

எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்..

அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்…

இப்போ பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாது….

கொஞ்ச நாள் கழிச்சு கடைத்தெரு போனீன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும்…

அரிசி பருப்பு உப்பு புளி, மொளகா, எண்ணெய் -ன்னு ஒன்னும் கெடைக்காது. விவசாய வேலைக்கு ஆள் வராது…

ஒரு வேலைக்கும் ஒருத்தனும் வரமாட்டான்…‘எப்படி வருவான்னேன்…..?

பணம் வேணும்னு உழைக்கிறாங்க….

கட்டு கட்டா பணம் இருக்கும் போது எவன்தான் வேலைக்கு வருவான்…?

பணத்தை தலைமாட்டில் வச்சுக்கிட்டு வயித்துல ஈரத் துணியை போட்டு கிட்டு கெடக்க வேண்டியதுதான்…!

ஊரே தூக்கம் வராம கெடக்கும்….

இப்போ அது மதிப்புள்ள பணம் காசு இல்லை…. வெத்து பேப்பர்தான்னேன்….

உழைப்புதான் பணம்ன்னேன்…

பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான்….

உழைப்பு இல்லாமல் ஒன்னுமே கெடைக்காது…. ஒன்னுமே கெடையாது….
இப்ப தெரிஞ்சுதா…?

உழைப்பு இல்லாமல் கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு கதை கந்தலாகி போகும்னேன்…”

இது பொருளாதார படிப்பு படிக்காமல் நாட்டு நிலையையும் நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் படிச்ச ஒரு பாமர மனுஷன், படிக்காத மேதை … சொன்னது.