சென்னை

ன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மதுரைக்குச் சென்று இரவு திரும்பி வருகிறார்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம் வெகு சிறப்பாக மதுரையில் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.  இதில் கலந்து கொள்வதற்காகச் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8.45 மணிக்கு காரில் புறப்படுகிறார்.

காலை 9 மணிக்கு பழவந்தாங்கலில் உள்ள நேரு ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்று அங்கு நடக்கும்நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து 9.30 மணிக்குப் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை 9.40 மணிக்குச் சென்றடைகிறார். காலை 10 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு காலை 11.25 மணிக்கு மதுரை விமான நிலையத்தைச் சென்றடைகிறார்.

அங்கிருந்து புறப்பட்டு மதுரை சர்க்கியூட் ஹவுசுக்கு பிற்பகல் 12.30 மணிக்குச் செல்கிறார். சற்று ஓய்வுக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின், சர்க்கியூட் ஹவுசில் இருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு 4.30 மணிக்குச் சென்று, அந்த நூலகத்தைத் திறந்து வைக்கிறார்.

5.15 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு ஏ ஆர் மைதானத்தைச் சென்றடைந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோச்சடையில் உள்ள மறைந்த கருமுத்து கண்ணனின் வீட்டுக்கு இரவு 7 மணிக்குச் செல்கிறார்.

மாலை 7.30 மணிக்குப் புறப்பட்டு மதுரை விமான நிலையத்தை இரவு 8 மணிக்குச் சென்றடைகிறார்.  இரவு 8.55 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு இரவு 10.10 மணிக்குச் சென்னை விமான நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தடைந்து சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டிற்குச் செல்கிறார்.