டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் 1,27,952 பேர் பாதிக்கப்பட்ட உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 1,059 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம்  தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று மட்டும்  புதிதாக மெலும் 1,27,952 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,20,80,664 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்  13,31,648 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 1,059 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் இறந்துள்ளனர். இதன்முலம்  நாட்டின் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,01,114 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில், மேலும், 2,30,814 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொதத எண்ணிக்கை 4,02,47,902 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை  168.98 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 47,53,081 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரை 73.79 கோடி மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று  ஒரே நாளில் 16,03,856 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.