டில்லி

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவிடம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரி உள்ளார்.

தற்போது இந்திய குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றுள்ளார்.  இவர் பழங்குடியைச் சேர்ந்த முதல் பெண் குடியரசுத்தலைவர் என்னும் புகழைப் பெற்றுள்ளார்.   அவருக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பை வகித்து வருகிறார்.  இவர் ஆண் குடியரசுத்தலைவரை ராஷ்டிரபதி என் ஆழைப்பது போல் பெண் குடியர்சுத் தலைவரை ராஷ்டிர பத்னி என குறி[ப்பிடார்.

அவர் இவ்வாறு கூறியது குடியரசுத்தலைவரை அவமதிப்பதாக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தஹ்டு.  இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் வெடித்து ஆளும் கட்சி ஆதரவாளர்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இன்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தமது பேச்சுக்குக் குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு கோரி உள்ளார்.  தாம் வாய் தவறி அத்தகைய வார்த்தைகளைப் பேசி விட்டதாகவும் அதற்காக வருந்துவதாகவும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.