டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,26,84,484 ஆக உயர்ந்து 1,65,577 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,563 பேர் அதிகரித்து மொத்தம் 1,26,84,484 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 445 அதிகரித்து மொத்தம் 1,65,577 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 50,095 பேர் குணமாகி  இதுவரை 1,17,30,054 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7,83,844 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 47,288 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 30,57,885 ஆகி உள்ளது  நேற்று 155 பேர் உயிர் இழந்து மொத்தம் 56,033 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 26,252 பேர் குணமடைந்து மொத்தம் 25,49,075 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,51,375 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,357 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,37,591 ஆகி உள்ளது.  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,681 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,866 பேர் குணமடைந்து மொத்தம் 11,04,225 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 28,370 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,279 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,20,434 ஆகி உள்ளது  இதில் நேற்று 32 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,657பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,856 பேர் குணமடைந்து மொத்தம் 9,65,275 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 42,483 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,326 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,09,002 ஆகி உள்ளது.  நேற்று 5 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,244 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 911 பேர் குணமடைந்து மொத்தம் 8,91,048 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 10,710 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,672 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,03,479 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,789 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,842 பேர் குணமடைந்து மொத்தம் 8,66,913 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 23,777 பேர் சிகிச்சையில் உள்ளனர்.