சென்னை: மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய அமர்வில், மக்கள் நலப்பணியாளர் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலப் பணியாளர்களை முதன்முதலாக நியமித்தது திமுக ஆட்சிதான். ஆனால், அதிமுக ஆட்சியில் அவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தற்போது இந்த விவகாரம் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள. உச்ச  நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என அறிவித்தார்.

முன்னாள் சபாநாயகர் தனபால் பட்ஜெட்டில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி கோரிக்கை வைத்துள்ளதரு குறித்து கூறிய முதல்வர், நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்களை முன்னாள் சபாநாயகர் தனபால்  வரவேற்றுள்ளார் அதற்கு நன்றி. அதில் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. அவர்கள் கூறிய கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…