சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை தீவுத் திடலுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பழமையான பேருந்து முனையங்களில் ஒன்றான பிராட்வே பேருந்து நிலையத்தை நவீன பேருந்து முனையமாக மாற்ற தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

‘மல்டி மாடல் இன்டக்ரேஷன்’ என்ற பெயரில் மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் வகையில் மேம்பாலங்கள், சுரங்கப்பாலங்கள் அமைக்கவும்.

பேருந்து நிலைய வளாகத்தில் வணிக வளாகங்கள் கட்டவும், அருகில் உள்ள குறளகம் கட்டிடத்தை 10 மாடிகள் கொண்ட அடுக்குமாடி அலுவலக வளாகமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக பிராட்வே பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பேருந்துகளை தீவுத்திடலுக்கு மாற்றவும், அதற்கு ஏற்றவாறு ரூ. 5 கோடி செலவில் தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி பணிகளை துவக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டவுடன் இன்னும் ஒரு சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத் திடலுக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.