சென்னை: கடலுக்குள் பேனா சிலை எதுக்கு? என கேள்வி எழுப்பியுள்ள சவுக்கு சங்கர், ‘துணிவு வசூலை எடுத்து பேனா சிலை வைக்கலாம், முரசொலி அறக்கட்டளை பணத்தைக்கொண்டு, கோபாலபுரம், வேளச்சேரி, உளுந்தை கிராமம் போன்ற உங்களுக்கு சொந்தமான இடங்களில். இதை விட பெரிய பேனா சிலை வைக்கலாமே. பேனா என்ன, பால் பாண்ட் சிலையே வைக்கலாமே! என காட்டமாக விமர்சித்தார்.

ஜிஸ்கொயர் என்ற தனியார் நிறுவனத்தை விமர்சித்ததாக கூறிய புகாரின் பேரிலும், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காகவும், காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கொடுமை படுத்தப்பட்டவர் பிரபல பத்திரிகையாளரும், யுடியூபருமான சவுக்கு சங்கர். இவரை நீதிமன்றம் ஜாமினில்விடுதலை செய்தது.  இவர் திமுக அரசின் ஊழல்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி வருகிறார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளார். இவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியதடன்,  முதல்வர் ஸ்டாலின் மீதும் புகார் கூறினார். இதைத்தொடர்ந்து ஊடகம் ஒன்றில் பேசும்போது, கடலில் பேனா சிலை வைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது, அதில் எழுந்த மோதல் குறித்து பரபரப்பாக கூறினார். அப்போது அவர் கூறியதாவது,

எனக்கு இப்போதும் கலைஞர் மீது அபிமானம் உண்டு. ஆனால், மக்கள் வரி பணத்தில் பேனா வைக்கும் அளவிற்கு அபிமானம் இல்லை; அது பைத்தியக்காரத் தனம்.  ‘உங்க அப்பாவுக்கு சிலை வைக்க, ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்து மெரினாவில் சிலை வைப்பீங்க?  வைங்க, கலைஞர் மீது நீங்க ரொம்ப பிரியமா இருந்தால், 5 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடி சொத்து வெச்சிருக்கீங்களே, முரசொலி அறக்கட்டளை, திமுக அறக்கட்டளையில், எடுத்து வையுங்க சிலை!

கருணாநிதி நாட்டிற்காக என்ன செய்துவிட்டார்? கலைஞரின் பேனா தலை சாயும் போதெல்லாம், தமிழர் தலை நிமிர்வான் என்றால், கலைஞர் இறந்தபின் எல்லா தமிழனும் இறந்துவிட்டானா?

100 சதவீம் பேனா சிலையை எதிர்க்கிறேன். அப்புறம் மூக்கு கண்ணாடிக்கு சிலை வைப்பீங்க? தாம்பரம் பக்கம் மஞ்சள் துண்டுக்கு சிலை வைப்பீங்க? விளையாடுறீங்களா? யாரு பணம் இது? பேனா சிலை வைக்கவில்லை என்றால், மக்கள் பீச்சுக்கு வருவதை நிறுத்தி விடுவார்களா?

சிலை வைக்க வேண்டுமென்றால்,  சித்தரஞ்சன் சாலை வீடு, வேளச்சேரி வீடு, உளுந்தை கிராமத்தில் உள்ள இடத்தை எல்லாம் விற்றுவிட்டு பேனா சிலை வைங்க என காட்டமாக கூறியவர், யாரோட பணத்தை எடுத்து பேனா சிலை, பென்சில் சிலை வைக்கிறீங்க? இதெல்லாம் யாரோட பணம்?

ரெட் ஜெய்ண்ட் கடைசியா பண்ண இரண்டு படத்தோட பணத்தை வெச்சு பேனா சிலை வைங்க. துணிவு படத்தோட வசூலை எடுத்தா, இதை விட பெரிய பேனா சிலை வைக்கலாமே. இவ்வளவு சம்பாதிக்கிறீங்களே,  பேனா என்ன, பால் பாண்ட் சிலையே வைக்கலாமே!

கலைஞரின் படைப்புகளை நாட்டுடமை ஆக்கி, அவரை பெருமைபடுத்துங்க. அதில் இருக்கும் காப்பு உரிமை பணம் வேண்டும் என்று தானே செய்ய மாட்டீர்கள்.  தமிழ்நாட்டுக்கு கலைஞர் ஆற்றிய பணிக்கு நினைவிடத்திற்கு செலவழித்தது போதும்; நாட்டுக்கு என்ன தியாகம் பண்ணாரு கலைஞர்? சினிமாவில் கதை , வசனம் எழுதி சம்பாதித்த சொத்தா இவ்வளவும்? என்ன தியாகம் பண்ணிட்டாரு?

கோபாலபுரம் வீடு அரசுடையமைக்குறீங்க தானே, அந்தவீட்டை  இடித்து விட்டு அங்கு பேன சிலை வைங்க. கடலில் வைக்க கூடாது. பேனா சிலையை கைவிடவில்லை என்றால், மக்களிடம் மிகப்பெரிய அதிருப்தியை சந்திப்பார்கள் என்றார்.

மேலும், அதிமுகவினர் ஜெயலலிதாவிற்கு அவர்கள் கட்சி அலுவலகத்தில் சிலை வைத்துக் கொண்டார்கள். நீங்களும் உங்க கட்சி அலுவலகத்தில் ஒரு சிலை வைத்து விட்டீர்கள். அரசு செலவில் கலைஞருக்கு ஒரு நினைவிடம் வைத்துவிட்டார்கள். அந்த மரியாதை போதும்; அதொடு நிறுத்திக்கோங்க.

இவ்வாறு பேசினார்.

கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன்! சீமான் ஆவேசம் – மோதல் கைலப்பு…

எங்கள் கைகள் பூப்பரித்துக்கொண்டிருக்குமா? சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு பகீரங்க மிரட்டல் – வீடியோ