சென்னை: எங்கள் கைகள் பூப்பரித்துக்கொண்டிருக்குமா? பேனா சிலையை உடைப்பேன் என்ற சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு பகீரங்க மிரட்டல் விடுத்தார். அது தொடர்பான  வீடியோ வைரலாகி வருகிறது.

கடலில் பேனா சிலை வைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் சலசலப்பை ஏற்படுத்தியது.  திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவாளர்களை குவித்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளையும், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழலியாளர்களையும் பேச விடாமல் இடைஞ்சல் செய்தனர். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த திட்டத்துக்கு தொடக்கம் முதலே நாம் தமிழர் கட்சி சீமான் உள்பட மீனவர்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்திலும், சீமான் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், பேனா சின்னத்தை கடலுக்குள் வைக்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தேவையென்றால் அண்ணா அறிவாலயத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர், கடலுக்குள் சிலை வைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதே என்று கூறியதற்கு, மீறி வைத்தால் உடைத்து எறிவோம் என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, எங்கள் கைகள் பூப்பரித்துக்கொண்டிருக்குமா? என சீமானுக்கு பகீரங்க மிரட்டல் விடுத்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கருத்துக்கேட்பு கூட்டம் என்பது ஒரு கண்துடைப்பு நாடகம் என்பது, ஏற்கனவே மின்கட்டண உயர்வு கட்டணத்தில் தமிழ்நாடு அரசு தமிழக மக்களை வஞ்சித்தது குறிப்பிடத்தக்கது.