மணிப்பூர் வன்முறை குறித்து மூன்று மாதங்களாக மௌனம் காத்து வரும் மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

இந்த தீர்மானத்தை அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்.பி. கவுரவ் கோகோய் மக்களவையில் இன்று கொண்டு வந்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அவர் “மோடி அவர்களே இன்று வரை ஏன் மணிப்பூர் செல்லவில்லை, இந்த நாட்டு மக்களின் தலைவராக இருந்து கொண்டு மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்?

மணிப்பூர் பற்றி பேச பிரதமர் ஏன் 80 நாட்கள் எடுத்துக் கொண்டார், அதுவும் 36 வினாடிகள் மட்டுமே பேசினார். தவிர, மணிப்பூர் முதல்வரை பிரதமர் ஏன் இன்று வரை பதவி நீக்கம் செய்யவில்லை?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கவுரவ் கோகோய், “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த நான் பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினேன்.

ஆனால் பாஜக-வைச் சேர்ந்த மணிப்பூர் எம்.பி.க்கள் யாரும் இது தொடர்பாக அவையில் வாய்திறக்காமல் உள்ளதே பாஜக அவர்களை ஒரு பொருட்டாக கருதவில்லை என்பதை காட்டுகிறது” என்று குற்றம்சாட்டினார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது சன்சாத் டி.வி.யில் ஒளிபரப்பான செய்தி குறித்து மக்களவையில் கூச்சல் குழப்பம்…