சாலையில் ஆட்டம் போட்ட பாஜக பெண் வேட்பாளருக்கு மேற்கு வங்க தேர்தல் ஆணையம் நோட்டிஸ்

Must read

கொல்கத்தா

சாலையில் ஆடிய மேற்கு வங்க மாநில பாஜக பெண் வேட்பாளருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸ்  அறுதி பெரும்பானமையுண்டன் ஆட்சி அமைத்துள்ளது.  ஆனால் அவர் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார்.  எனவே அவர் தனது முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

வரும் 30 ஆம் தேதி அன்று இடைத் தேர்தல் நடக்க உள்ளது.  மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் பெண் வழக்கறிஞர் பிரியங்கா திப்ரீவல் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்.  பிரியங்கா வேட்பு மனு தாக்கல் செய்த போது தேர்தல் விதிமுறை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஏராளமானோருடன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  வழியில் சாலையில் அவர் பெங்காலி நடனம் ஆடியதாகக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

இதையொட்டி திருணாமுல் காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக் குற்றம் சாட்டி நோட்டிஸ் அனுப்பி உள்ளது.  பிரியங்கா இதை மறுத்துள்ளார்.  மம்தா பானர்ஜி தன்னை பார்த்துப் பயந்ததால் தனது பிரசாரத்துக்கு இடையூறு செய்யும் எண்ணத்துடன் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article