மேஷம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். உறவினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரலாம். முன்பு வரவு எட்டு டாலர். செலவு பத்து  டாலர்னு இருந்துச்சு. இப்ப அப்டியே ஆப்போசிட். சந்தோஷத்தில் குதிக்காம கன்ட்ரோல் பண்ணிக்குங்க.  சாப்பாட்டு விஷயம் = ஆரோக்ய விஷயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது. கண்டதை/ கண்ட நேரத்தில்/ கண்ட இடத்தில்/ கண்டபடி சாப்பிடாதீங்க. அளவா.. நேரம் தவறாமல் சுகாதார இடத்தில் சாப்பிட்டால் ஷ்யூராய் ஆரோக்யம் பிழைக்கும் என்று உங்களுக்கு நான் சொல்லியா தெரியணும்? குடும்பத்தில் உள்ள குட்டீஸ் நடந்துகொள்ளும் முறை மற்றும் அவங்க சாதனை பற்றி  நிம்மதியடைவீங்க/ மகிழ்ச்சியடைவீங்க/ பெருமைப்படுவீங்க.

ரிஷபம்

கூடுமானவரை எதிலும் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். தேவையில்லாத விஷயங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு அலுவலகத்தில் செல்வாக்குடன் கூடிய பொறுப்புகள் வந்து சேரலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் அவசர வேலை ஒன்றை செய்து பாராட்டுப் பெறுவீங்க. ஆரோக்யம் சூப்பர். நிதி நிலை திருப்திகரம். குடும்ப மகிழ்ச்சியா அமோகம். இவ்வாறு உங்க லிஸ்ட்டில் உள்ள எல்லா அயிட்டமும் பச்சை ஸ்கெட்ச் பேனாவால டிக் வாங்கும். உடல் நலம் நல்லாவே இருக்கும். கல்வியில் உங்களை மேலும் மேம்படுத்திக்கப் போறீங்க. இத்தனை காலத்தில் இந்த அளவு செலவுகள் கட்டுப்பட்டு நீங்க பார்த்ததே இல்லைதானே? செலவுகள் அனேகமாக முதலீடுகளாய்த்தான் இருக்கும். குடும்பத்திலும், வெளியிடத்திலும், அலுவலகத்திலும், பள்ளியிலும், கல்லூரியிலும், எதிர்பாலினத்தினரால் நன்மை பெற வாய்ப்பு உள்ளது.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 22 முதல் 24 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகவும் கவனமாக இருங்கள்.

மிதுனம்

பிசினஸ்ல முன்னேற்றமான போக்கு காணப்படும். புதிய நபர் மூலம் பணவரவுகளும், புகழ் தரும் வேலைகளும் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோயின் கொடுமை இப்பொழுது தீரும். பழைய பங்குதாரர்களோடு பிரச்சினை ஏற்பட்டதன் விளைவாக அவர்களை விலக்கிவிட்டுப் புதியவர்களைச் சேர்த்துக்கொள்ள முன்வருவீங்க. வெளிநாட்டிலிருந்து தாய்நாடு திரும்பியவர்கள் மீண்டும் வெளிநாடு செல்ல எடுத்த முயற்சி கைகூடும். பணியாளர்கள் உங்களை விட்டு விலகினாலும் புதிய பணியாளர்களை சேர்த்துக் கொண்டு தொழிலைச் சிறப்பாக நடத்துவீங்க. இடமாற்றம், ஊர்மாற்றம், வீடுமாற்றம் என்று மாற்றங்கள் வரலாம். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுங்க முடிவுக்கு வந்து ஹாப்பியான சூழல் ஆரம்பிக்கும். கணவர் / மனைவி உறவினர்களால் பெரிய அளவில் நன்மைகளும் உதவியும் கிடைக்கும். புது செலவுங்க வந்தாலும் அதெல்லாம் சந்தோஷம் தரும் சுப செலவுகளாய்த்தான் இருக்கும். ஷ்யூர்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 24 முதல் 26 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகவும் கவனமாக இருங்கள்.

கடகம்

கூட்டுத்தொழில் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். தொழிலை விரிவாக்கம் செய்ய பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறுவீங்க. குடும்பத்துல மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கலைஞர்களில் சிலருக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். மருத்துவச் செலவு குறையும். மறக்க முடியாத சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் சிறப்பாக நடைபெற்று மகிழ்ச்சி தரும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் வந்து சேரும். குழந்தைங்க வாழ்வில் உயர்வு ஏற்படுங்க. அவங்களைப் பற்றி உங்களுக்கு இருந்து வந்த கவலைங்க எல்லாமே பனி மாதிரி மறையும். அலுவலகம் மற்றும் குடும்பத்தில் இருந்து வந்த டென்ஷன்கள் மறையும். சகோதர சகோதரிக்கு இருந்துக்கிட்டிருந்த பிரச்னை ஒண்ணு தீரும். உங்களால் பலர் பலனடைவாங்க.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 26 முதல் 28 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகவும் கவனமாக இருங்கள்.

சிம்மம்

எதிர்பாராத செலவுகள் முன்னே நிற்கும். எதையும் நிதானித்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, பதவி உயர்வும், சம்பள உயர்வும் எதிர்பாராத வகையில் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டு மழையில நனைவீங்க. மனக்கிலேசம் மாறும். கோபத்தின் காரணமாக விலகிச்சென்ற குடும்ப உறுப்பினர்கள், பகை மறந்து மீண்டும் வந்திணைவர். தொழில் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் நேரமிது. நீங்க பெரியவங்களா இருந்தால் அலுவலகத்திலும் சிறியவங்களா இருந்தால் கல்வி நிலையத்திலும் இத்தனை காலம் இருந்துக்கிட்டிருந்த அழுத்தம் சற்றுக் குறையும். எந்த நன்மையுமே சிறு தாமதத்துக்குப் பிறகு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். நிம்மதியான வாரம். தேவையேயில்லாத கவலைங்களைக் கற்பைனை செய்து மனசுல போட்டுக்கிட்டு அவதிப்படாதீங்க.

கன்னி

பணவரவுகள் இருந்தாலும் செலவுகள் சிந்திக்க வைக்கும். எதையும் நிதானித்து செய்தால், சில பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் உயர்வான போக்கு காணப்படும். ஒதுக்கி வைத்த செயல் ஒன்றை உற்சாகத்துடன் செய்து முடிப்பீங்க. தடைகள் அகலும். தனவரவு திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஏதேனும் ஒரு துறையில் சாதனை படைக்க சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். பிள்ளைகளை நெறிப்படுத்தி ஒங்களோட மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும்.  எதிலும் கொஞ்சம் நிதானம் தேவை. விரயங்களை சுபவிரயமாக மாற்றிக் கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கலாம். வெளியூர், வெளிநாடு செல்லவேண்டிய வாய்ப்புகள் வருவதோடு அவற்றால் நன்மையும் வரும். கலகலப்பான சூழல் வீட்டில் / குடும்பத்தில் நிலவும்.

துலாம்

சொந்தத் தொழில் செய்பவர்கள், அதிக வேலைப்பளுவால் ஓய்வின்றி பணியாற்றுவாங்க. கூட்டுத் தொழிலில் லாபத்தைக் குவிக்க பங்குதாரர்களிடம் ஆலோசனை செய்வீங்க. ஏற்ற இறக்கமாக இருந்த வியாபாரத்தை உயர்த்திட மற்றவர்களின் அனுபவம் பயன்படும். குடும்பத்துல குதூகலம் இருந்தாலும், குதர்க்கமான பேச்சுகளைக் குறைத்துக் கொள்வது அவசியம். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்களினால் உயர்வைப் பெறுவாங்க. பங்குச்சந்தை லாபம் சுமாராகவே காணப்படும். காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அரசியல்துறையினருக்கு நிலுவையில் உள்ள பணம் வரும். கலைத்துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியதிருக்கும். பொறுப்பை உணர்ந்து செயல்படுங்க. கடமையை சரிவர செய்தாகணும்…தட்டிக் கழிக்கப் பார்க்காதீங்க.  மனசில் உள்ள அழுத்தங்கள் விலகி நிம்மதி வரும்.

விருச்சிகம்

சக ஊழியர்களின் ஒத்துழைப்புப் பயன்தரும். சொந்தத் தொழிலில் அதிக வாய்ப்புகளைப் பெறுவீங்க. கூட்டுத்தொழில் அதிக லாபம் தருவதாக இருக்கும். புதிய கிளைகள் தொடங்கி வியாபாரத்தைப் பெருக்க, பங்குதாரர்களோடு பேசி முடிவெடுப்பீங்க. குடும்பத்துல மகன் அல்லது மகளால் பொருளாதார நிலை உயரும். பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த பணவரவுகள் வரலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் பணப் பற்றாக்குறை நீங்கும். மம்மிக்கு அவங்க பொறந்த வீட்டிலிருந்து சொத்து அல்லது அதில் பங்கு வரும்.  உங்கள் பேச்சில் இருக்கும் இனிமையும் மென்மையும் உண்மையும் எல்லா இடங்களிலும் பாராட்டு வாங்கித்தரும். இன்னும் சிறிது  நாட்களுக்கு மிக மிக ஜாக்கிரதையாப் பேசணும். நீங்க ஸ்டூடன்ட்டா? வாவ். ஜெயிச்சுட்டீங்க. குடும்பத்தில் யாருக்கேனும் திருமணம் நிச்சயமாகும். இப்போதைக்குப் புது வேலை மாற நினைக்க வேணாங்க. இருப்பதை விட்டு ஓடுவதைப்பிடிக்க நினைச்சா அது ஓடும்.. இது பறந்துவிடும்.

தனுசு

உத்தியோகஸ்தர்கள் புதிய முயற்சி களைச் சிறிது காலம் தள்ளிவைப்பதே உகந்தது. சிறிய தவறும், பெரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம். பேச்சுகளால் பிரியமான நண்பர்களின் மனதைப் புண்படுத்தும்படி ஆகலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், பெயரைப் பெருமைப்படுத்தும்படி முக்கிய வேலை ஒன்றை செய்து கொடுப்பீங்க. கூட்டுத் தொழில் வியாபாரத்தில், முக்கிய திருப்பங்களால் லாபம் அதிகமாகும். மாற்றம் செய்த பணியாளர்களின் உழைப்பால் ஏற்றமான பலன்கள் ஏற்படலாம். அலுவலகத்திலும் அக்கம்பக்கத்தினருடனும் பேசும்போது வார்த்தைகளில் மிக (இதைப் பல முறை சொல்லிக்குங்க) கேர்ஃபுல்லா இருங்க. சட்டென்று ஒரு வார்த்தை விஷம் மாதிரி வெளிப்பட்டு, அடுத்த நிமிஷம் கையை உதறிக்கிட்டு, ’அடடா.. தப்பு பண்ணிட்டேனே’ன்னு நீங்க ரிக்ரெட் செய்து முடிப்பதற்குள் பகை மளமளன்னு குட்டிபோட்டுப் பெருகிடும். அதெல்லாம் வேணாங்க

மகரம்

குடும்பத்துல பிரச்சினைகள் இருந்தாலும், குழப்பங்கள் ஏற்படாது. சமயோசிதமாகச் செயல்பட்டு சங்கடங்களை சரிசெய்வீங்க. மங்கல வாழ்வை எதிர்நோக்கும் பெண்களுக்கு மாலை சூடும் முயற்சிகள் உருவாகும். கலைஞர்களின் கற்பனைகளுக்கு வடிகாலாக, வாய்ப்புகள் வந்துசேரும். கடினமான பணியில் கவனம் தேவை. லோன் கேட்டிருந்தீங்களா வங்கியிடம்? கொடுப்பாங்க. டாடிக்குப் பெரிய அளவில் நன்மை காத்திருக்கு. வெளிநாட்டு வேலை தேடிக்கிட்டிருந்தீங்களே. கிடைச்சாச்சு இந்த வாரமே. வாயை மட்டும் ஜிப் போட்டு மூடிக்குங்க. தட்ஸ் ஆல். இப்போ அலுவலகத்தில் சூப்பரா உழைக்க ஆரம்பிச்சிருக்கீங்க. அது உங்களுக்கு அருமையான ரிஸல்ட் குடுத்து மகிழ்விக்கப்போகுது. ஒங்க வயசு 30 க்கு  மேலயா? சூப்பர் அப்படின்னா உழைப்பால் நன்மையும் நிறைய லாபமும் வரும்.

கும்பம்

திறமையோடும், தீவிர முயற்சியோடும் காரியங்களில் ஈடுபட்டு நல்ல பலன்களை அடைவீங்க. தளர்ச்சி அடைந்த செயல்களில் தக்க நபர்களின் துணைகொண்டு முன்னேறுவீங்க. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு சில சலுகைகளைப் பெறுவீங்க. சொந்தத் தொழில் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர் பணியில் அதிக கவனம் செலுத்த நேரலாம். பணியில் சிறுமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். ஒங்களோட திறமையை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகளும் கைகூடும். மம்மி உங்களுக்குச் சிறந்த வழிகாட்டி. அதை தயவு செய்து புரிஞ்சுக்குங்களேன். மகன் மகள் டென்ஷன் செய்கிறார்கள் என்று நீங்கள் டென்ஷன் ஆவதில் பயனே இல்லை.

மீனம்

கூட்டுத் தொழில் வியாபாரம், எதிர்பார்க்கும் லாபத்தோடு நடைபெறும். போட்டிகள் அதிகரிப்பதால், அதை முறியடிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பம் சீராக நடைபெற்றாலும், சிறு சிறு பிரச்சினைகளும் தலைகாட்டும். கலைஞர்கள் பணிகளில் உற்சாகத்தோடு ஈடுபடுவர். பங்குச்சந்தை வியாபாரம், சுமாரான லாபத்தைத் தரும். புதிய வாகனம் வாங்குவதில் மும்முரம் காட்டுவீங்க. தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் இருந்தாலும் அவற்றில் பாதிப்புகள் ஏற்படாது. பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளப் புதிய திட்டங்களைத் தீட்டுவீங்க. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பொழுது கலகலவென்று போகும். புதிய செலவுகள் வரலாம். அவை அவசியமானவையா என்று ஆராய்ந்து பின் கார்டைத் தேய்க்கவும். பல நாட்கள் தள்ளிப்போட்ட விஷயங்களை முனைந்து முடிப்பீங்க.