வேலூர்: வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கண்டுபிடிப்பில் உருவான ரோபோ மூலம் இன்று ஆயுத பூஜை விழா நடை பெற்றது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும்  இன்று (அக்டோபர் 4ஆம் தேதி) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்தியின் 9ஆம் நாளான நவம திதியில் வழக்கம்போல் ஆயுத பூஜை வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 4.38 மணிக்கு நவம திதி தொடங்கிவிட்டது. இன்று பிற்பகல் 2.21 மணி வரை இந்த திதி நேரம் இருக்கிறது. பூஜை முகூர்த்த நேரம் பிற்பகல் 1.57 மணிக்கு தொடங்கி 2.45 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் ஆயுத பூஜை செய்து வழிபாடு நடத்தலாம்.

ஆயுத பூஜை தினத்தில் தொழிலுக்கு தேவையான உபகரணங்கள், வாகனம் மற்றும் இல்லங்களில் இருக்கும் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை வைத்து வழிபாடு நடத்த வேண்டும். அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்து மஞ்சள் குங்கும் கொண்டு பொட்டு வைக்க வேண்டும். பின்னர் மாலை, பூ அணிவித்து துர்க்கை அன்னை முன் பூ, பழம், பொறி ஆகியவற்றைக் கொண்டு படையலிட்டு வழிபாடு நடத்த வேண்டும்.

இந்த நிலையில், பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான வேலூர் இன்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் கண்டுபிடித்த ரோபோ மூலம், ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோ உதவி: நன்றி – சன் நியூஸ்