சென்னை: 10 முக்கிய சாலை குறுக்குவெட்டுகளில் நவீன முறையில் வடிகால் கட்டியுள்ளதால் நடப்பாண்டு சென்னையில் மழைநீர் தேங்காது என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். சென்னை வரலாற்றில் முதன்முறையாக சாலையை கடக்கும் வகையில், புதிய தொழில் நுட்பத்துடன், கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஆண்டு மழைநீர் தேங்கிய புளியந்தோப்பு உள்பட முக்கிய 10பகுதிகளில்,  சாலை குறுக்குவெட்டுகளில் முன் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் ஆர்சிசி கல்வர்ட் பாக்ஸ்களைக் கொண்ட ரெடிமேட் பெட்டிகளைக்கொண்டு நூதன முறையை கையாண்டு, மழைநீர் வடிகால் தோண்டிய பகுதிகளில் வைத்து வடிகால் கட்டியுள்ளதால் நடப்பாண்டு அந்த பகுதிகளில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகளி,  ஆழ்வார்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலை, கேபி தாசன் சாலை, நந்தனம் சேமியர்ஸ் சாலை, புளியந்தோப்பு கொரோட்டு உள்பட  10 முக்கிய சாலை குறுக்குவெட்டுகளில் மாநகராட்சி வடிகால் கட்டியுள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

2021-ம் ஆண்டு பருவமழையின் போது புளியந்தோப்பு, ஆழ்வார்பேட்டை, பெரம்பூரில் உள்ள காகித ஆலை சாலை மற்றும் எஸ்பி கோவில் சாலைகளில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதை தடுக்கும் வகையில் நவீன முறையில் வடிகால்கள் கட்டப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி  தலைமை பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த சாலையை கடக்கும் வடிகால் திட்டப்பணிகளை மேற்கொள்வது சென்னை  “மாநகராட்சி வரலாற்றில், இதுவே முதல் முறை. பொதுவாக, போலீஸ் அனுமதி, போக்குவரத்து மாற்றம் மற்றும் கோட்டத் துறை பயன்பாடுகளின் ஈடுபாட்டால், சாலை கிராசிங்குகள் சவாலாக இருந்து வந்தன. ஆனால், இந்த புதிய நடைமுறையால், விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு ஒருநாளில் மீண்டும் போக்குவரத்தை மீட்டெடுக்க முடிந்தது என்றும் தெரிவித்தவர், அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடையும் என்றும், கிட்டத்தட்ட 94% முடிந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

நவீனை முறையிலான ரெடிமேட் காங்கிரீட் பெட்டிகளை, தோண்டப்பட்ட பள்ளங்களில் இறக்கி, அவற்றை ஒற்றொன்று ஒன்று இணைத்து, வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், நிறைய நேரத்தை மிச்சப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ள மாநகராட்சி பொறியாளர் செந்தில், இதன்மூலம்,  பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பு பணி 36மணி நேரத்தில் முடிவடைந்தது என்றும்,  “கொளத்தூர் பூம்புகார் நகரில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட மழைநீர் வடிகால் வலையமைப்பு வேலவன் நகர் அருகே பேப்பர் மில்ஸ் சாலையை கடக்கும் பணிகளும் விரைவாக முடிக்கப்பட்டது என்றவர், இதற்காக நாங்கள் இரவு பகலாக உழைத்தோம் என்றும் எங்களுடன் மெட்ரோவாட்டர் மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகளும் முழு ஓத்துழைப்பு வழங்கி பணியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்,” என்று தெரிவித்துள்ளார்.