திமுக கூட்டணியில், சலசலப்புகளுக்கு மத்தியில் 6 இடங்களைப் பெற்று, அந்த அனைத்திலும் தனிச்சின்னத்தில் போட்டியிடும் அனுமதியைப் பெற்று, பானைச் சின்னத்தைப் பெற்றது.

காட்டுமன்னார்கோயில், வானூர், செய்யூர், நாகப்பட்டினம்(பொது), அரக்கோணம் மற்றும் திருப்போரூர்(பொது) ஆகிய தொகுதிகளில் களம் கண்டது. இந்நிலையில், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் பெற்ற ஒரு சின்னத்தைக் கொண்டு, போட்டியிட்ட 6 இடங்களில் 4ஐ கைப்பற்றி சாதனை படைத்துள்ளது அக்கட்சி.

நீண்டகால சின்னத்தைக் கொண்ட கம்யூனிஸ்ட்டுகளே, தலா 2 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், விடுதலை சிறுத்தைகள், தனி சின்னத்தில் 4 தொகுதிகளை வென்றது உற்று நோக்கப்படுகிறது.

கடந்த 1999ம் ஆண்டு துவங்கிய அக்கட்சியின் தேர்தல் வரலாற்றில், முதன்முறையாக 1 நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 4 சட்டமன்ற உறுப்பினர்கள்(அனைத்தும் தனிச்சின்னம்) என்ற அங்கீகாரம் அக்கட்சிக்கு கிடைத்துள்ளது.

அடுத்தடுத்த காலங்களில், மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை நோக்கி அக்கட்சி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.