சென்னை: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அமைச்சர்கள்  கே.என். நேரு ஐ. பெரியசாமி தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா   மற்றும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மின்சாரத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய அதிகாரிகள் இந்த ஆலோசனையில்  பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,   கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என  அறிவுறுத்தினார். “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது.  மேலும், சென்னையில் குடிநீர் தேவை குறித்து ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு  தேவையான நடவடிக்கை எடுக்கவும்,  கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம், கிடைப்பதும் குறைவு என்பதை மனதில் வைத்து செயல்பட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

 அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.n குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார்.  மேலும். இதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வறட்சி பாதித்த மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் தடையின்றி செயல்பட சீரான மின்விநியோகம் வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.