அதிமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கே.பி.முனுசாமி, கடைசியாக நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில், அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். ஆனாலும், இந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹல்லி தொகுதியில் களமிறங்கினார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் அத்தொகுதியில் வென்றுள்ளார். அதேசமயம், அதிமுக ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது. அதேசமயம், ராஜ்யசபா பதவிகாலம் இன்னும் 5 ஆண்டுகள் வரை பாக்கியுள்ளது.

ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பதைவிட, ராஜ்யசபா உறுப்பினராக இருப்பதில், சலுகைகள் மிக அதிகம். எனவே, முனுசாமி எந்த முடிவை எடுப்பார் என்று இதுவரை தெரியவில்லை. அதேசமயம், ஏதேனும் ஒரு பதவியில் மட்டும்தான் இருக்க முடியும்.

அப்படி அவர், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும்; அதேசமயம் அவர் மாற்றி முடிவெடுத்தால், ராஜ்யசபாவுக்கு ஒரு இடைத்தேர்தல் வரும்.