மதுரை:
திரைப்பட நடிகர் வைகைப்புயல் வடிவேலின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல்நிலை குறைவால் காலமானார். அவருக்கு வயது 52.

நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் நடிகர் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார். இரண்டு படங்களில் மட்டுமே நடித்த அவர் பின்னர் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. இதைத்தொடர்ந்து அவர் ஜவுளிக்கடை வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் கடந்த சில நாட்களாக கல்லீரல் செயலிழப்பு காரணமாக மதுரை ஐராவதநல்லூரில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.