தமிழகத்தில் 5ல் இருவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரிவதில்லை: ஆய்வு

Must read

மிழக அளவில் நடைபற்ற  ஆய்வில்  தமிழகத்தில் உள்ள மக்களுக்கு 5ல் இருவருக்கு தங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரியவில்லை என்று  எரிக் லைப் சைன்ஸ்  மேற்கொண்ட இந்திய இதய ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது

மேலும் 2293 பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் பலருக்கு  வெள்ளை ஆடை உயர் இரத்த அழுத்தம் (white coat hypertension), மறை இரத்த அழுத்தம்(masked hypertension) இரண்டும் இருப்பது தெரியவில்லை , அதாவது 5 நபரில் ஒருவருக்கு வெள்ளை ஆடை உயர் இரத்த அழுத்தம் (white coat hypertension) இக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

வெந்நிற இரத்த அழுத்தம் என்பது மருத்துவமனைக்கு சென்றாலோ அல்லது வெள்ளை உடை அணிந்த மருத்துவரைப்பார்த்தாலோ அவர்களுக்கு திடீரென்று இரத்த அழுத்தம் உயரும் , இது ஒரு வகை என்றால் , மருத்துவமனையில் இரத்த அழுத்தத்தைச் சோதித்தால் மருத்துவமனையில் சாதாரணமாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு எப்போதும் உயர் இரத்த அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும்.

இதுபோன்ற சோதனைகளை அவ்வப்போது மருத்துவமனைகளில் சோதித்துக்கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில் உயர் இரத்த அழுத்தத்தால் இதயம் , சிறுநீரக மற்றும் மூளை சம்பந்தப்பமான பிரச்னைகள் வரவாய்ப்புண்டு. என்று மருத்துவர் உபேந்திர கவுல் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்தியா முழுதும் 15 மாநிலங்களில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 18918 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில்  1233 மருத்துவர்கள் 9 மாதங்களாக மேற்கொண்டனர்
இதில் குறிப்பிடத்தக்கதாக சில தகவல்கள் கிடைத்துள்ளன

1. இந்தியர்களுக்கு காலையில் உள்ள இரத்த அழுத்தத்தை விட மாலையில் இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது
2. நிமிடத்திற்கு 72முறை இருக்கவேண்டிய இதய  துடிப்பு , 80 ஆக இருந்துவருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
அதிகப்படியான  மருத்துவ வசதிகள் உள்ள  நகரங்களில் இருக்கும் சூழ்நிலையை விடகிராமங்களில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வும் குறைவு.

கிராமங்களில் (அ) சிறு நகரங்களில் உள்ள மக்களுக்கு இரத்த அழுத்தம் பற்றிய விழிப்புணர்வு பற்றி எப்படி இருக்கும் என்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி எனும் சிறு நகரத்தில் உள்ள  சிவா மருத்துவமனை மருத்துவர் சிவகுமார்,MBBS,DO., அவர்களிடம் கேட்டபோது   ’’ எங்கள் மருத்துவ மனையில் வரும் அனைவருக்கும் முதற்கட்டமாக  இரத்த அழுத்தத்தை முதலில் பரிசோதித்த பின்னரே  மருத்துவரை பார்க்க அனுமதிக்கின்றோம்.

இதனால்  இரத்த அழுத்தம் இருப்பது அவர்களுக்கு தெரியாவிட்டாலும் நாங்கள் செய்யும் பரிசோதனை மூலம் அவர்களுக்கு இரத்த அழுத்த மதிப்பினை பார்த்து  ஒரு வேளை உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர்களை எச்சரிக்கைச் செய்து வாழ்க்கை முறையில் மாற்றப்படவேண்டிய உணவு முறைகளையும், உடற்பயிற்சியையும், மருந்து மாத்திரைகளையும் கொடுத்து  ஆலோசனை வழங்குகின்றோம், தொடர்ச்சியாக இருந்தால் கொழுப்பு சத்து இரத்த ஆ்வையும் மேற்கொண்டு ஆலோசனை வழங்குகின்றோம்.ஆனாலும் பலரும் இந்த ஆலோசனைகளை  முறையாக பின்பற்றுவதில்லை.

அப்படி புறக்கணித்த பலரும் பலவிதமான பிரச்னைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் , ஆனாலும் விழிப்புணர்வு செய்யும் பணியை நாங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றோம். தனிப்பட்ட முறையில் நோயாளிகளும் கவனத்தில் கொள்வது சிறந்தது. கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு தங்கள் உடல் மீதான அக்கறை இன்னமும் கவனம் செலுத்தவேண்டும்.
என்றும் தெரிவித்தார்

பரபரப்பான வாழ்க்கை நிலையில் இருந்தாலும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் உடல் மீதான கவனத்தினை அதிகம் செலுத்தவேண்டியத அவசியமாகிறது. உணவும், உடற்பயிற்சியும் நம்மை பாதுகாக்கும். எனவே உங்களுக்கு எந்தப் பிரச்னைகள் இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்

-செல்வமுரளி

 

More articles

1 COMMENT

Latest article