அருகம்புல் மருத்துவப்பயன்கள் – மருத்துவர் பாலாஜி கனகசபை

Must read

அருகம் புல் (cynodon dactylon)

இரண்டு மீட்டர் வரை வளரக்கூடிய அருகம்புல் ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தெற்கு ஐரோப்பா போன்ற குளிர் மற்றும் மித வெப்ப மண்டலங்களில் வளரக்கூடிய புல் தாவரமாகும்

நம்நாட்டில் அருகம் புல் நம்முடைய பாரம்பரியத்தில்  பல நூற்றாண்டுகளாக பயன்பட்டுவருகிறது. இப்புல் வகை பரிணாம வளர்ச்சியில் முதல் முதலாக தோன்றிய புல் வகைகளாக கருத்தப்படுகிறது

அருகம் புல்லில் உள்ள சத்துக்கள்

அதிகமான கால்சியம்
பாஸ்பரஸ்
சோடியம்
நார்சத்து
பொட்டாசியம்
அல்கலாய்ட்ஸ் Alkaloids
மெக்னீசியம், மாங்கனீஸ், காப்பர் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளனடிஎன்ஏ சிதைவை (DNA Productive) தடுப்பதில் அருகம்புல் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.

மருத்துவ உலகில் சரியான ஆய்வுமுடிவுகளை வழங்கும் தளமான அமெரிக்கா தேசிய மருத்துவ ஆய்வு நூலகம் தளத்தில் US National Library of Medicine National Institutes of Health) வெளியிடப்பட்டுள்ள  ஆய்வில் மேற்கண்ட கருத்து தெரிவிக்கிறது
இணைப்பு https://www.ncbi.nlm.nih.gov/pubmed/19429359

அருகம் புல்லின்  சாறைப் தினமும் பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்புத் திறனும் , செல்களின் வளர்ச்சிதை மாற்றமும் , செல்களில் ஏற்படும் மரபணு மாற்றத்தினையும் சீர் செய்து நோய் எதிர்ப்பாற்றலைக்கொடுத்து புற்றுநோயில் இருந்து பாதுகாத்து உடலில் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகள் மற்றும் இரணங்களை சரி செய்கிறது

பாக்டிரியா(Anti Mirobial) ,பூஞ்சை(Anti Fungal),  வைரஸ் தடுப்பு (AntiViral) , புண்களில் ஏற்படும் வீக்கம் (Anti Inflammatory), புற்றுநோய் எதிர்க்கும் (AntiCancer), தோள்களில் ஏற்படும் புண்கள் Eczema, கொப்பளங்கள் (Rashs) தடுக்கும்

இது அருகம்புல் உடன் இஞ்சி சாறை தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம் வயிற்றுப்புண் குணமடைகிறது. அருகம் புல்லில் இருக்கக்கூடிய அல்கலாய்ட்ஸ் வயிற்றில் உள்ள அமிலக்கார தன்மையை சரி செய்து வயிற்றுப்புண் வராமல் தடுக்கிறது

பெண்கள்
Polycystic Ovarian Syndrome (சினைப்பை நீர்க்கட்டி வராமல் தடுக்க உதவுகிறது, வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறை சரி செய்கிறது.

இரத்தப்போக்கு:  இரத்தப் போக்கினை சரி செய்து, இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இரத்த சோகை வராமல் தடுக்கிறது,

எடை குறைப்பு: அருகம்புல் சாற்றை தினமும் காலை மாலை பருகி வந்தால் உடல் எடை குறையும்

பல்: பல்லிலிருக்கும் பல் ஈறுகளில் இரத்தக்கசிவையும் தடுக்கிறது,.  மூக்கில் இரத்த கசிவு ஏற்படாமல் தடுக்கிறது

மன இறுக்கம் (Stress Management)
மன இறுக்கத்தைக் குறைத்து உடலில் புத்துணர்ச்சியை  (Anti Fatigue) ஏற்படுத்துகிறது.

மலச்சிக்கல்

இதில் இருக்கும் நார்சத்து குடல் இயக்கத்தினை சரி செய்து மலச்சிக்கலை போக்குகிறது, இரத்தமூலத்தினை தடுக்கிறது. குளிர்காலத்தில் வரக்கூடிய காய்ச்சல், சளி போன்றவற்றில் இருந்து அருகம்புல் சாறு பாதுகாப்பு அளிக்கிறது

சித்த மருத்துவம்

அருகம்புல். (Cynodon Dactylon).

அருகம்புல் வாத பித்த ஐயமோ டீலை
சிறுக வறுக்குமின்றுஞ் செப்பிடலறிவுதருங்
கண்ணோ யொடுதலைநோய், கண்புகையி ரத்தபி
முன்னே யொழிக்கு முறை.
–பதார்த்த குண விளக்கத்தில் உள்ள சித்தர் பாடல்

கண் நோய், இரத்தபித்தம், மருந்துகளினால் ஏற்படும் சூடு,  திரிதோசம்(வாத,பித்த,கபம்)  போக்குகிறது, அறிவு தரும் நியாபகசக்தியை மேம்படுத்தும், உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை போக்கும், உடலில் வன்மையை கொடுக்கும். நோய் வராமல் பாதுக்காக்கும் திறன் உள்ளது
இது சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும்

ஆன்மீகம்
உலகில் முதன் முதலில் தோன்றிய புல்வகைகளில் முதல் வகையாக அருகம்புல் கருதப்படுகிறது. எனவே நம் நாட்டில் முதற்கடவுள் என போற்றப்படும் கணபதிக்கு இந்த அருகம்புல் ஆனது படைக்கப்படுகிறது. மாலையாகவும்  அணிவிக்கப்படுகிறது,

யோகா
மூலதார சக்கரத்தை பலப்படுத்துகிறது

எடுத்துக்கொள்ளும் விதம்

அருகம் புல் சாறை காலை , மாலை 50-100 மில்லி தேன் கலந்து எடுத்துக்கொள்ளலாம்
அருகம்புல்லை கசாயம் செய்தும் பருகி வந்தால் தொற்றுநோய்கள் வராது

சர்க்கரை, போன்ற நாள்பட்ட வியாதிக்காரர்கள் மருத்துவர்களின் அறிவுரையுடன் எடுத்துக்கொள்ளலாம்

மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS, PhD
அரசு மருத்துவர்
கல்லாவி
9942922002

 

More articles

Latest article