நாடு முழுவதும் அவ்வப்போது மருத்துவத் துறை தொடர்பான புரளிகள் வருவதும், அதற்கும் மருத்துவர்கள் மறுப்பு தெரிவிப்பதும் அனைவரும் அறிந்ததே.

ஆனால், தற்போது வலம் வரும் புரளி யானது, ‘இதய வலி வந்தால் இருமுங்கள்’ என்று தெரிவித்து உள்ளது.

இந்த புரளி குறித்து பிரபல மருத்துவர் ஷஃபி பத்திரிகை.காம் வாசகர்களின் உடல்நலம் மீதான அக்கறை காரணமாக விளக்கம் அளித்துள்ளார்…

இதய வலி வந்தால் இரும வேண்டுமா ? (CPR – Cardio Pulmonary Resuscitation)  .

Cough CPR – ஒரு அலசல்

ஒரு மனிதன் அன்றாடம் .ஒரு நிமிடத்திற்கு , 20 முதல் 25 முறை சுவாசித்தல் வேண்டும் ,
ஆக்சிஜன் எனும் பிராண வாயுவை உறிந்து , கார்பண்டை ஆக்சைடு எனும் நச்சு வாயுவை வெளியேற்ற வேண்டும் ,

அவ்வாறு செய்ய அவனுக்கு உறுதுணையாக இருதயமும் சேர்ந்து செயல்பட்டிட வேண்டும் , அவரது இதயம் மற்றும் மூளையின் செயல்பாடு ஒத்துப்போக வேண்டும் ,

அடுத்தது அவரது இதயம் நிமிடத்திற்கு 66 முதல் 75 , சராசரியாக 72 முறை துடித்து ,தம் நான்கு அறையிலிருந்தும் இரத்த ஓட்டத்தினை முறைப்படுத்திட வேண்டும் .

இதற்காக அவரது இதயத்தின் ரத்த நாளங்கள் தடையின்றி இயங்கிட வேண்டும் , அவரது இருதயத்தின் இயக்க முனைகள் சீராக தேவைப்படும் இயக்க உந்துசக்தியை அளவாக படர்ந்துவிட வேண்டும் ,

ஆக

இத்தனை இயக்கமும் சரிவர நடந்தால தான் நமது குருதியோட்டம் தலையின் மூளை முதல் உள்ளங்கால் வரை சீராக பரிமாரி, நம் உயிரோட்டத்திற்கு உரித்தான சக்தியை அளித்து நம்மை பாதுகாக்கும்

இதில் எந்த நடைமுறை தடைபடுமாயினும் , உடனே மனிதனின் நிலை மாறி உயிர்சிக்கல் ஏற்பட்டுவிடும். அப்படி ஒன்று தான், ஹார்ட் அட்டாக் என நாம் அனைவரும் வழக்கத்தில் கூறும் மயோகார்டியல் இன்ஃபார்க்‌ஷன் ,

அதாவது, இருதய ரத்த குழாய்களின் குருதித்தடையினால் ஏற்படும் இதய தசையின் இறப்பு !! இதற்கு காரணம் பல , இதற்கான மருத்துவமும் பல்வேறு வகைப்படும் .

ஆனால், ஒருவருக்கு இதய பிரச்சினைகள் வந்ததும் அவருடைய இதய துடிப்புகள் மாறுபட்டு , இரத்த ஓட்டங்கள் தடைபட்டு, மூளைக்கும் ,இன்ன பிற உறுப்புகளுக்கும் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது ஏற்படும் ,

நெஞ்சு வலி
உடல்சோர்வு , தளர்ச்சி ,
தலைசுற்று
மயக்கம் ,
கடைசியாக இருதய செயல்நிறுத்தம்..!

இந்த கடைசியாக நடக்கும் உறுப்பு செயல் நிறுத்தத்திற்கு முன்னர் ஒருவர் அவசரகதியில் இருதய பிரிவு துரித சிகிச்சையில் அனுமதி பெற்றால , அவரை அனேகமாக காப்பாற்றிட முடியும்

ஆனால், கடைசி கட்டமான இதய செயலிழப்புடன் ஒருவர் சிகிச்சைக்கு வருவாரானால் அவருக்கு இந்த சி.பி.ஆர் எனும் இதய, சுவாச மீள்சிகிச்சை செய்ய வேண்டும் ,

அப்படி செய்யும் மருத்துவம், பயிற்சி பெற்ற, துறை சார்ந்த வல்லுனர்களால் மட்டுமே சாத்தியம் ,

இது கடைசி உயிர்காக்கும் முயற்சி என்பதால் , இதன் விளைவு சில சமயங்களில் தோல்விக்குள்ளாகலாம் ,

ஆனால் சமீபத்திய வழக்கமான வாட்சப் வதந்தி ஒன்று பரவி வருகிறது இதய வலி போன்ற அறிகுறி இருந்தால் உடனே சுவாசம் இழுங்கள், இருமுங்கள், சுவாசம் விடுங்கள் என (Cough CPR)  மருத்துவர் ஒருவர் அதற்கான  உடை மற்றும்.அணிகலன்கள் அணிந்துகொண்டு சொல்வதாக வெளியாகி உள்ளது.

இந்த புரளிகளை நம்ப வேண்டாம் .

இருமினால் இதயத்தில் இருக்கும் ரத்த நாள அடைப்பு எப்படி திறக்கும் ?

அவசியமில்லாது அதிகமான அழுத்தத்தை இதய சுவர்களுக்கு தருவதால் ஏற்கனவே இறந்துகொண்டிருக்கும் தசையின் திசுக்கள் இன்னும் வேகமாக இறக்க நேரலாம் ,

எனவே….!!

108  மற்றும் உடனடி மருத்துவ உதவியை நாடிட முனையுங்கள் ..!

உயிரை காப்பாற்றிய பிறகு ஆசுவாசமாக இருமலாம் !!

உபரி தகவல் :

பல நேரங்களில் இதய ரத்த நாள அடைப்பில் தடைபடும் ரத்த ஓட்டம் சீராக நுரையீரலுக்கு செல்லாமல் அம்மனிதர் நோயாலேயே இருமல் வந்து பலர் இருமிக்கொண்டு தான் இருப்பர்.

அவரை மேலும் இரும சொல்வது !!

” கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும் ” எனும் கதை தான் ..!!

வாழ்க அறிவுசார்ந்த நன்னலத்துடன்

https://www.bhf.org.uk/informationsupport/heart-matters-magazine/medical/ask-the-experts/cough-cpr

எச்சரிக்கை :-  இதை எந்த மருத்துவ அமைப்பும் அங்கீகரிக்கவில்லை ..

எச்சரிக்கை மக்களே… எச்சரிக்கை…