மனிதனின் வயது மற்றும் உயிரியல் வயது தொடர்பான ஆராச்சியாளரான டாக்டர் ஸ்டீவ் ஹார்வர்த் உயிரியல் வயதை குறைக்கும் சோதனையில் வெற்றிபெற்றுள்ளார்.

ஒருவரது வயது எவ்வளவு என்று கேட்டால், அவர் பிறந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பது ஒரு பொதுவான பதில். இருப்பினும், உயிரியலின் (உயிரணு) அடிப்படையில் வயது அளவிடப்பட்டால்.

வயது தொடர்பான நோய்களுக்கான வெவ்வேறு பாதிப்புகள் அல்லது ஆபத்து நிலைகள் காரணமாக அதே வயதுடைய நபர்களுடன் ஒப்பிடும் போது வயதானவர்களாகவோ அல்லது இளமையாகவோ தோற்றமளிக்கலாம்.

இந்த உயிரியல் வயதை குறைக்க 8 வாரங்களில் 6 பெண்களின் உயிரியல் வயதை சராசரியாக 5 ஆண்டுகள் வரை குறைத்துள்ளார்.

45 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட 6 பெண்களை தேர்வு செய்து அவர்களின் உணவு, தூக்கம், உடற்பயிற்சி மற்றும் மன அழுத்த மேலாண்மை உள்ளிட்டவற்றில் குறிப்பிட்ட நடைமுறையை பின்பற்றி இந்த சோதனையில் வெற்றி பெற்றுள்ளார்.

இதில் 62 வயதுடைய பெண் ஒருவரின் உயிரியல் வயது பரிசோதனைக்கு முன் 57ஆக இருந்த நிலையில் இந்த எட்டு வார பரிசோதனைக்குப் பின் 46ஆக அதாவது 11 வயது குறைந்துள்ளது.

இந்த பரிசோதனையில் இடம்பெற்ற பெண்களில் இதுவே அதிக வயது மாற்றம் என்ற போதும் இந்த 6 பெண்களுக்கும் சராசரியாக 5 வயது குறைந்துள்ளது.