அரசு மருத்துவமனைகளில் தொற்றா நோய் பிரிவு பற்றி தெரியுமா? மருத்துவர் பாலாஜி கனகசபை

Must read

மிழக அளவில் நடைபெற்ற  ஆய்வில்  தமிழகத்தில் உள்ள மக்களுக்கு 5ல் இருவருக்கு தங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரியவில்லை என்று  எரிக் லைப் சைன்ஸ் மேற்கொண்ட இந்திய இதய ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது

மேலும் 2293 பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் பலருக்கு  வெள்ளை ஆடை உயர் இரத்த அழுத்தம் (white coat hypertension), மறை இரத்த அழுத்தம்(masked hypertension) இரண்டும் இருப்பது தெரியவில்லை , அதாவது 5 நபரில் ஒருவருக்கு வெள்ளை ஆடை உயர் இரத்த அழுத்தம் (white coat hypertension) இக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
வெந்நிற இரத்த அழுத்தம் என்பது மருத்துவமனைக்கு சென்றாலோ அல்லது வெள்ளை உடை அணிந்த மருத்துவரைப்பார்த்தாலோ அவர்களுக்கு திடீரென்று இரத்த அழுத்தம் உயரும் , இது ஒரு வகை என்றால் , மருத்துவமனையில் இரத்த அழுத்தத்தைச் சோதித்தால் மருத்துவமனையில் சாதாரணமாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு எப்போதும் உயர் இரத்த அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும்.

கிராமங்களில் (அ) சிறு நகரங்களில் உள்ள மக்களுக்கு இரத்த அழுத்தம் பற்றிய விழிப்புணர்வு பற்றி எப்படி இருக்கும் என்று கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி போச்சம்பள்ளி எனும் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மைய  மருத்துவர் பாலாஜி கனகசபை  அவர்களிடம் கேட்டபோது

அரசு மருத்துவமனைகளில் இரத்த அழுத்தம் பரிசோதிக்கின்றார்களா என கல்லாவி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திரு.பாலாஜி கனகசபை அவர்களிடம் கேட்டபோது ’’30 வயதுக்கு மேற்பட்டு வரக்கூடியவர்கள் அனைவருக்கும் இரத்த அழுத்தமானது கட்டாயம் பரிசோதிக்கப்படுகிறது.

இதற்கென தொற்றா நோய் சிகிச்சைப் பிரிவு அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் இருந்துவருகிறது. இதற்கென தனியாக ஒரு செவிலியரே இயங்கிவருகின்றார். அவர்களுக்கு ஆரம்ப காலக்கட்டத்திலேயே இரத்த அழுத்தத்தை கண்டறிந்து ஒரு வேளை அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ, குறைந்த இரத்த அழுத்தமோ இருந்தால் ஆலோசனை வழங்கப்பட்டு  இரத்த அழுத்தத்துடன்  , சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பு சத்து போன்ற இரத்த பரிசோதனைகளை செய்து மருந்தும் வழங்கப்படுகிறது,

மேலும் அடுத்த வரவேண்டிய நாட்கள் எப்போது என்றும் அறிவுறுத்தி உணவு கட்டுப்பாடுகள் , உடற்பயிற்சி போன்ற ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ளாதவர்களை  அந்தந்த பகுதியில் இருக்கும் கிராமப்புற செவிலியர்களைக்கொண்டு கண்காணிக்கப்பட்டும் வருகிறது. இதுபோன்ற ஆலோசனைகளுக்கென்று 104 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகளை இலவசமாகப்பெறலாம்

பரபரப்பான வாழ்க்கை நிலையில் இருந்தாலும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் உடல் மீதான கவனத்தினை அதிகம் செலுத்தவேண்டியத அவசியமாகிறது. உணவும், உடற்பயிற்சியும் நம்மை பாதுகாக்கும். எனவே உங்களுக்கு எந்தப் பிரச்னைகள் இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்

-செல்வமுரளி

More articles

Latest article