சென்னை: காணாமல் போன 10ஆம் வகுப்பு மாணவி  மடிப்பாக்கம் அருகே உள்ள கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். அவரது மரணத்துக்கு காரணம் என்ன என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மடிப்பாக்கத்தை அடுத்த உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர், கார்த்திக் தம்பதியின் மகள் 15வயதான வேதிகா. இவர், , நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17ம் தேதி காலை  பள்ளிக்கு சென்ற வேதிகா, பள்ளி முடிந்து அன்று மாலை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது தந்தை பள்ளி மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடினார். இங்கும் கிடைக்காத நிலையில், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பதிவு செய்த காவல்துறையினர் வேதிகாவை தேடி வந்தனர். அவருடன் படித்து வரும் மற்ற மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். வேதிகாவுக்கும் ஏதேனும் பிரச்சினை உள்ளதா?, ஆண் நண்பர்கள் உள்ளனராக என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.

இநத் நிலையில்,  மடிப்பாக்கம் அடுத்த தலைகணஞ்சேரி கல்லுக்குட்டையில் பள்ளி சீருடையுடன் சடலம் ஒன்று மிதப்பதாக அதை பார்த்தவர்கள்  பல்லாவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு   விரைந்து வந்த பல்லாவரம் போலீசார்,  தாம்பரம் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட உடலை அவர்கள் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணையில், மீட்கப்பட்ட சலலம், காணாமல் போன பள்ளி மாணவி வேதிகா என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வேதிகாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், வேதிகாவுக்கு சரிவர படிப்பு வராததால் பெற்றோர் படிக்க சொல்லி திட்டியதாகவும், அதனால், வேதிகா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பெற்றோர்கள் கூறியதாக கூறப்படுகிறது. பள்ளி மாணவி இறந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.