சென்னை:  சேலத்தில்  முக்கிய நீர் தேக்க தொட்டியில் அழுகிய நாயின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஜாதிய வன்முறைகள், போதைப்பொருட்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல, பொதுமக்கள், மாணவர்கள்  பயன்படுத்தும் குடிநீரில் அசுத்தம் செய்யப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற அவலங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதை கண்காணிக்க வேண்டிய காவல்துறையினர், ஆளும்கட்சிக்கு அடியாட்களாக மட்டுமே செயல்பட்டு நள்ளிரவு கைதுகளை அரங்கேற்றி வருகின்றனர்.

ஏற்கனவே வேங்கைவாசல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாமல் தமிழ்நாடு காவல்துறை தள்ளாடி வரும் நிலையில், அடுத்தடுத்து பல்வேறு பகுதிகள் மற்றும் பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளிலும் அசிங்கங்கள், அழுகிய பொருட்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  சேலத்தில் குடிநீர் தேக்கத் தொட்டியில் உயிரிழந்த நாய் குட்டி  கிடந்த விவகாரம் திமுக அரசு மீது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூரத்தை அரங்கேற்றியவர்களை கைது செய்துகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் ள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ளது துட்டம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டையான் வளவு கிராமம் உள்ளது. இந்த பகுதியில் மிகப்பெரிய நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சுற்றுவட்டார அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் செல்கிறது. இதில் வட்டார அரசு பள்ளி கூடங்களுக்கும் இந்த நீர்தான் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கம்போல் நீர் தேக்க தொட்டியின் மீது ஆபரேட்டர் அம்மாசி என்பவர் மேலே ஏறி பார்த்தபோது நீர்த்தேக்க தொட்டியின் உள்ளே ஒரு குட்டி நாய் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ந்த அவர் கூச்சலிட்டார். இதையடுத்து அங்கு கிராம மக்கள் சூழ்ந்தனர்.

ஆனால், இந்த நீர்த்தேக்க தொட்டியில் நாய்க்குட்டி இறந்த நிலையில்  அழுகியநிலையில் கிடந்த நிலையில், நீர்தேதேக்க தொட்டியில் இருந்து கிராமங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்துள்ளனர். பொதுமக்களும், அந்த  நீரை ஏதும் அறியாமல் வழக்கம் போல் தங்களது அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

தற்போது நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் உள்ளதா, அதை சுத்தம் செய்ய வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்ய ஊழியர் மேல்நிலை தொட்டிமீது ஏறி ஆய்வு செய்தபோதுதான், தொட்டியில் அழுகிய நிலையில் நாய் குட்டி சடனம் கிடந்துள்ளது தெரிய வந்ததுள்ளது. இதனால், அந்த பகுதி கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி கிராம மக்கள் நீர்த்தேக்க தொட்டி அருகே குவிந்த நிலையில்,  நாய்க்குட்டியை கொடூரமாக வீசிய நபரை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர்.

 இது தொடர்பாக தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்துறையினர் விரைந்து வந்து, நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குடிநீருக்காக பயன்படுத்தப்படும் தொட்டியில் நாய் குட்டியை வீசிச் சென்ற சம்பவத்தால் அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

ற்கனவே கடந்த பிப்ரவரி 7ந்தேதி அன்று சிவகாசி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டையில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் நாயை கொன்று போட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டையில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுத்தம் செய்வதற்காக நேற்று தொட்டி மேல் பணியாளர்கள் ஏறினர். தொட்டிக்குள் இறந்த நாய் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். மர்ம நபர்கள் நாயை கொன்று 50 அடி உயரம் உள்ள தொட்டியில் ஏறி போட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அந்த பகுதிய ஊராட்சி தலைவர் காளீஸ்வரி எம்.புதுப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். சிவகாசி டி.எஸ்.பி., தனஞ்செயன் தொட்டியில் ஏறி ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில் நாயை கொன்று போட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கால்நடை துறையினர் பிரேத பரிசோதனை செய்வதற்காக நாய் உடலை கொண்டு சென்றனர். தொட்டியை சுத்தம் செய்வதற்காக முதல் நாள் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் மக்கள் இதனை பயன்படுத்தவில்லை. எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் நிகழ்வுகளாக அரங்கேறி வருகிறது.