டில்லி

இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 27 ஆம் தேதிக்குள் வெள்ள நிவாரணத் தொகை வழங்குவதாக கூறியாதாக டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ல் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. எனவே தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை வழங்கக்கோரி உள்துறை மந்திரி அமித்ஷாவைச் சந்திக்கத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முடிவு செய்தது.

இன்று தமிழக  நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டில்லியில் சந்தித்தது.  சந்திப்புக்குப் பின்  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்  டி ஆர் பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் செய்தியாளர்களிடம்

”தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு, விரைந்து நிவாரணம் வழங்குமாறு அமித்ஷாவிடம் வலியுறுத்தினோம். மேலும் சுமார் ரூ. 37,000 கோடியை மத்திய அரசு உடனடியாக தருமாறு, கோரிக்கை வைத்தோம்.

மத்தியக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் பேரிடர் பாதிப்புக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து, வரும் 27-ம் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படும் என அமித்ஷா உறுதி அளித்துள்ளார்”.

என்று தெரிவித்துள்ளார்.