சிம்லா

ன்று இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று மதியம் 1.16 மணிக்கு இமாச்சலப்பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகி உள்ளது.

பூமிக்கடியில்  9 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

சம்பா மாவட்டத்தின் சில பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன.  இதைத் தவிர இங்குப் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.