டெல்லி: இந்தியாவில் பரவி வரும் புதிய காய்ச்சலான தக்காளி காய்ச்சல் இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாதித்துள்ளது என தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, அதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கி வரும் தக்காளி காய்ச்சல் என்னும் நோய். இந்த நோய் பாதிப்புக்குள்ளானவர்கள், காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலிகள் மற்றும், கைகள் மற்றும் தோலில் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் காணப்படுகிறது.  இந்த காய்ச்சல்  பெரியவர்களையும் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ஆனால், இந்த காய்ச்சலானது மற்ற வைரஸ் தொற்றுகளான, கொரோனா, குரங்கு அம்மை, டெங்கு, சிக்குன்குனியாவுடன் தொடர்புடையது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் தக்காளி காய்ச்சல் முதன்முதலில் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் மே 6 அன்று கண்டறியப்பட்டது, ஜூலை 26 ஆம் தேதி நிலவரப்படி, 5 வயதுக்குட்பட்ட 82 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொற்றுநோயுடன் உள்ளூர் அரசாங்க மருத்துவமனைகளால் தெரிவிக்கப்பட்டுள்ளன. கேரளாவின் மற்ற பகுதிகள் அஞ்சல், ஆரியங்காவு மற்றும் நெடுவத்தூர் பகுதிகளிலும் பரவி உள்ளது. நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உடல்களில், தடிப்புகள், சொறி அறிகுறிகள் போன்றவை காணப்பட்டால், அந்த குழந்தைகளை கட்டிப் பிடிக்கவோ, தொடவோ வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும்,  மூக்கு ஒழுகுதல் அல்லது இருமல் ஏற்பட்டால் கைக்குட்டையைப் பயன்படுத்த குழந்தையை ஊக்குவிக்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.