சென்னை:
ட்டப்பேரவையில் இன்று – பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளுக்கான மானிய மீதான் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் இன்று – பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. இரு துறைகள் மீது நடைபெறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர்.

இன்றைய விவாதத்தின் போது,  ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கான மானியத்தை அவர்களது வங்கி கணக்கில் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும்,  வாக்பு வாரிய சொத்துக்கள் பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேரமில்லா நேரத்தில் அதிமுக, விராலிமலை துவான் குளத்தில் நீர் கொள்ளவு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.