சென்னை:
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆக.10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் உள்பட 23 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த ஆய்வு கூட்டங்களை ஒருங்கிணைப்புக்குழு மேற்கொள்ளும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.