சென்னை

மிழகத்தில் 18 முதல் 45 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத் தமிழக அரசு  சர்வதேச அ:ளவில் மருந்துகளுக்கு ஒப்பந்தப் புள்ளி கோர உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மிகவும் அதிகமாக உள்ளது.  மற்ற மாநிலங்களில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை குறைந்து வரும் போதிலும் இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறி வருகிறார்.  18-45 வயது உள்ளோருக்குத் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால் தடுப்பூசி மருந்து இருப்பு மிகவும் குறைவாக உள்ளது.  தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 13 லட்சம் டோஸ்கள் போதாது என்பதால் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.  இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா சுப்ரமணியன், பழனிவேல் தியாகராஜன், மற்றும் தலைமைச் செயலாளர், அனைத்து துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்

இந்தக் கூட்டத்தில் 18 வயது முதல் 45 வயதுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதைத் தமிழக முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.  எனவே தடுப்பூசி மருந்து பற்றாக்குறையைப் போக்கத் தடுப்பூசிகளை சர்வதேச அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரி இறக்குமதி செய்யத் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.   எனவே அரசு சார்பில் சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுக் குறுகிய காலத்துக்குள் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.