சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் நிதி நிலை அறிக்கை  தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

தமிழக சட்டப்பேரவையில் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல் முறையாக முழு நிதி நிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்து, இன்று  வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். புதிய அறிவிப்புகளும் சலுகைகளும் இதில் இடம்பெறும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.   இந்த நிலையில், வேளாண் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதை முன்னிட்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்