சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டம்  எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

தமிழக சட்டமன்ற பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. நேற்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதையடுத்து 21ந்தேதி முதல் 23ந்தேதி வரை விவாதங்கள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில்,  அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று மாலை 4.30 மணி அளவில்  நடைபெற உள்ளது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.