சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட் 2022ஐ அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். தாக்கல் செய்து வருகிறார்.

தமிழ்நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று 2வதுமுறையாகவும், முதன்முறையாக முழுமையாகவும் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்துறை  அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

இன்று காலை 10மணிக்கு சட்டப்பேரவை கூடியதும், சபாநாயகர் அப்பாவு நிகழ்ச்சி நிரல்படி சபையை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் வேளாண் பட்ஜெட். உழவர் தொழிலே உலகில் உயர்ந்தது என உணர்த்தும் வகையில் பட்ஜெட்டை முன் வைப்பதில் பெருமைகொள்கிறேன் என்றவர், பட்ஜெட்டை தாக்கலின்போது, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப் பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மீதுமுள்ள 6 திட்டங்கள் நீண்ட கால திட்டங்கள் என்பதால் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் வேளாண் பட்ஜெட். உழவர் தொழிலே உலகில் உயர்ந்தது என உணர்த்தும் வகையில் பட்ஜெட்டை முன் வைப்பதில் பெருமைகொள்கிறேன் என்று கூறி, பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.