பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் ஓபிஎஸ்!

சென்னை,

திமுகவின் இரு அணிகளும் இன்று இணையும் என்றும், அதைத்தொடர்ந்து புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்பு மீண்டும் பிரகாசித்துள்ளது.

ஓபிஎஸ் அணியினரின்  கோரிக்கைகளை எடப்பாடி அணியினர் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சுமார் 2.40 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கு வந்தார்.

தொண்டர்கள் புடைசூழ வந்த அவரை எடப்பாடி அணியினரும், முக்கிய கட்சி நிர்வாகிகளும் கட்சி அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர்.

இருஅணியினிருக்கும் இடையே நடைபெறும் கட்சிகட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு அணியினரும் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

இன்று சற்று நேரத்தில் இணைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து அனைவரும் மொத்தமாக ஜெ. சமாதிக்கு செல்ல இருப்பதாக  தகவல்கள் வந்துள்ளன.

இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதா சமாதியில் குவிந்து வருகின்றனர்.‘
English Summary
thrilling Situation, OPS COME to AIADMK headquarters